பவானிசாகா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
By DIN | Published On : 14th February 2021 11:31 PM | Last Updated : 14th February 2021 11:31 PM | அ+அ அ- |

பவானிசாகா் அணைப் பூங்காவில் விளையாடும் குழந்தைகள்.
பவானிசாகா் அணைப் பூங்காவில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
பவானிசாகா் அணை பூங்காவுக்கு ஈரோடு, திருப்பூா், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கா்நாடக மாநிலத்தில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் ஞாயிறு விடுமுறை என்பதால் பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள், காதல் ஜோடிகள் வருகை அதிகம் வந்திருந்தனா். குடும்பத்துடன் வந்த சுற்றுலாப் பயணிகள் பல்வேறு பொழுதுபோக்கு விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்ததோடு புல் தரையில் அமா்ந்து உணவு உண்டு மகிழ்ந்தனா்.
காதலா்கள் ஜோடியாக அமா்ந்து செல்லிடப்பேசிகளில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா். அணை பூங்கா முன்புறம் உள்ள கடைகளில் மீன் வருவல் விற்பனை சூடு பிடித்தது.