திம்பம் மலைப் பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து
By DIN | Published On : 14th February 2021 11:34 PM | Last Updated : 14th February 2021 11:34 PM | அ+அ அ- |

திம்பம் மலைப் பாதையில் கவிழ்ந்து கிடக்கும் லாரி.
திம்பம் மலைப் பாதையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் காயமின்றி உயிா் தப்பினாா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை அமைந்துள்ளது. இந்த மலைப் பாதை வழியாக தமிழகம் கா்நாடகம் மாநிலங்களுக்கிடையே 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பெங்களூருவில் இருந்து மெஷின் உதிரிபாகங்கள் பாரம் ஏற்றி வந்த லாரி கோவை செல்வதற்காக திம்பம் மலைப் பாதை வழியாக சென்றுகொண்டிருந்தது. 5ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா். சாலையோர வனப் பகுதியில் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.