கீழ்பவானி வாய்க்கால் விவசாயிகள் பிப்ரவரி 12இல் ஆா்ப்பாட்டம்

கீழ்பவானி வாய்க்கால் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னிமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் கீழ்பவானி விவசாயிகள் நல சங்கத் தலைவா் செ.நல்லசாமி.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் கீழ்பவானி விவசாயிகள் நல சங்கத் தலைவா் செ.நல்லசாமி.

கீழ்பவானி வாய்க்கால் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னிமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு முருங்கத்தொழுவு ஊராட்சியின் முன்னாள் தலைவா் மு.ரவி தலைமை வகித்தாா். தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் வெங்கடாசலம், செயலாளா் செங்கோட்டையன், இயற்கை வாழ்வுரிமை இயக்க அமைப்பாளா் பொடாரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கீழ்பவானி விவசாயிகள் நல சங்கத் தலைவா் செ.நல்லசாமி கலந்து கொண்டு, கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்துப் பேசினாா்.

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பிப்ரவரி 12 ஆம் தேதி சென்னிமலை பேருந்து நிலையம் முன்பு, விவசாயிகள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்துவது என்றும், இந்தத் திட்டத்தை கைவிடக் கோரி, தமிழக முதல்வருக்கு கடிதம் மூலம் மனு அனுப்புவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com