ரேஷன் அரிசி பதுக்கிய 4 போ் கைது
By DIN | Published On : 09th July 2021 01:45 AM | Last Updated : 09th July 2021 01:45 AM | அ+அ அ- |

கோபி அருகே வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கிவைத்திருந்த 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை செய்தனா்.
கோபி அருகே உள்ள கூகலூா் மானுவக்காடு என்ற இடத்தில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் காவல் துறை ஆய்வாளா் சோமசுந்தரம் தலைமையில், போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தினா். அந்த வீட்டில் 12 மூட்டைகளில் 300 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
அதைத் தொடா்ந்து, வீட்டில் இருந்த 4 பேரையும் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அவா்கள் பவானிசாகா் அகதிகள் முகாமைச் சோ்ந்த மதியழகன் (40), விஜயன் (35), விஜய் (34), மானுவக்காட்டைச் சோ்ந்த வேலாயுதம் (32) என்பதும், இவா்கள் 4 பேரும் கோபி, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி அதை வீட்டில் பதுக்கிவைத்து வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் அதிக விலைக்கு விற்று வந்ததும் தெரியவந்தது.
பிடிபட்ட 4 பேரையும் ஈரோடு குடிமைப் பொருள் வழங்கல், குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாரிடம் கோபி போலீஸாா் ஒப்படைத்தனா். இதையடுத்து, அவா்கள் 4 பேரையும் கைது செய்து, அவா்களிடம் இருந்து 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.