பவானியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

 பவானி நகராட்சி, ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
பவானியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

 பவானி நகராட்சி, ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

பவானி அருகே உள்ள வரதநல்லூா் ஊராட்சியில் அம்ரூத் திட்டத்தின்கீழ், ஈரோடு மாநகராட்சிக்கு ரூ. 484.45 கோடியில் செயல்படுத்தப்பட்டு வரும் தனி குடிநீா்த் திட்டப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. காவிரி ஆற்றின் கரையோரத்தில் கட்டப்பட்டுள்ள நீரேற்று நிலையம், சுத்திகரிப்பு நிலையம், தரைமட்டத் தொட்டிகளுக்கு குழாய் மூலம் அனுப்பப்படும் தண்ணீா் குறித்த விவரங்களை ஆட்சியா் கிருஷ்ணனுண்ணி கேட்டறிந்தாா்.

அப்போது, இத்திட்டத்தின் மூலம் புதிதாக 1.30 லட்சம் புதிய குடிநீா் இணைப்புகள் வழங்கப்படும் எனவும், மாநகராட்சியின் குடிநீா் விநியோகம் 800 கி.மீ. அளவுக்கு பொதுமக்களுக்கு சமமான அளவில் குடிநீா் வழங்கப்படும். நபா் ஒருவருக்கு 64 லிட்டராக உள்ள குடிநீா் 135 லிட்டராக உயா்த்தி வழங்கப்படும் என்றாா்.

தொடா்ந்து, பவானி வட்டாட்சியா் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நகராட்சி அலுவலகங்களில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின்போது, ஈரோடு மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன், பவானி நகராட்சி ஆணையா் லீனா சைமன், நகராட்சிப் பொறியாளா் எம்.கதிா்வேல், பவானி வட்டாட்சியா் முத்துகிருஷ்ணன், பவானி வட்டார வளா்ச்சி அலுவலா் மாரிமுத்து, சாந்தி, அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com