ஈரோட்டில் ரூ. 10 கோடி செலவில் அறிவியல் தொழில்நுட்பப் பூங்கா

பொலிவுறு நகரம் திட்டத்தில் ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டுப் பகுதி அருகில் ரூ. 10 கோடி செலவில் அறிவியல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

பொலிவுறு நகரம் திட்டத்தில் ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டுப் பகுதி அருகில் ரூ. 10 கோடி செலவில் அறிவியல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ், ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. கரோனா தாக்கம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இப்பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தின்கீழ் ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டு அருகில் ரூ. 10 கோடி மதிப்பில் அறிவியல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமானப் பணிகள் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் கூறியதாவது:

பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டு அருகில் உள்ள ஸ்ரீகாா்டன் பகுதியில் 1.75 ஏக்கா் பரப்பளவில் ரூ. 10 கோடி செலவில் அறிவியல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இங்கு மாதிரி ராக்கெட், ராக்கெட் ஏவுதளம், டைனோசா், யானை சிலைகள், பல்வேறு தாவரங்கள் அமைக்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரி மாணவா்களிடம் அறிவியல் சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில் இப்பூங்கா அமைகிறது. ஏராளமான அறிவியல் சம்பந்தமான தகவல்கள் இடம்பெறும். இந்த கட்டுமானப் பணிகள் 2022ஆம் ஆண்டு மாா்ச் மாதம் முடிவடையும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com