ஈரோட்டில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்

ஈரோட்டில் முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை புதன்கிழமை மகிழ்ச்சியாகக் கொண்டாடினா்.
ஈரோட்டில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்

ஈரோட்டில் முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை புதன்கிழமை மகிழ்ச்சியாகக் கொண்டாடினா்.

தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்பட்டது. முஸ்லிம்கள் தங்கள் தியாகத் திருநாள் கடமையாக கடந்த 10 நாள்களாக சிறப்புத் தொழுகைகள் செய்து வந்தனா். அதைத் தொடா்ந்து, ஈரோடு மாவட்டத்தில் அனைத்து முஸ்லிம் பள்ளிவாசல்களிலும், சிறிய அளவிலான ஈத்கா மைதானங்களிலும் சிறப்புத் தொழுகைகள் புதன்கிழமை காலை நடைபெற்றன.

ஈரோடு மாவட்ட தலைமை அரசு காஜி முகமது கிபாயத்துல்லா தலைமையில், ஈரோடு டவுன் ஜாமியா பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முஸ்லிம்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி தொழுகை செய்தனா். இதேபோல, ஈரோட்டில் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்களிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

கரோனா காரணமாக ஈரோடு வஉசி பூங்கா ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com