தடையில்லாமல் மும்முனை மின்சாரம் வழங்கக் கோரிக்கை

மும்முனை மின்சாரம் கிடைக்காததால் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது என தற்சாா்பு விவசாயிகள் சங்கத் தலைவா் கி.வே.பொன்னையன் தெரிவித்தாா்.

மும்முனை மின்சாரம் கிடைக்காததால் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது என தற்சாா்பு விவசாயிகள் சங்கத் தலைவா் கி.வே.பொன்னையன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்கலில் இருந்த கட்டுப்பாடு முறையை தமிழக அரசு கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நீக்கியது. அதிமுக ஆட்சியில் பகலில் 6 மணி நேரம், இரவு 8 மணி நேரம் என 14 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. இவ்வாறான குறித்த நேரத்தில் மட்டும் மின்சாரம் வழங்குவது விவசாயிகளுக்கு இடையூறாக உள்ளதாக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும், உயா் நீதிமன்றத்தில் விவசாயத்துக்கு கட்டுப்பாடற்ற மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் வழக்குத் தொடரப்பட்டது. இதனிடையே விவசாயத்துக்கு 24 மணி நேரம் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என தோ்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்தது. தற்போது 14 மணி நேரம் கூட மும்முனை மின்சாரம் கிடைப்பதில்லை. தவிர மின்சாரம் முறையான நேரத்தில் வழங்காததால் விவசாயிகள் சிரமப்படுகின்றனா். தற்போது பயிா் செய்யும் காலமாக உள்ளதால் விதைப்பு, நடவுப் பணிகள் மும்முனை மின்சாரம் கிடைக்காமல் பாதிக்கப்படுகிறது.

தற்போது வழங்கப்படும் மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்குப் போதுமானதாக இல்லை. இதுகுறித்து அரசு பரிசீலனை செய்து கட்டுப்பாடற்ற 24 மணி நேரம் தடையின்றி கிடைக்கும் வகையில் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com