கொங்காடையில் சிறாா் திருமணத் தடுப்பு விழிப்புணா்வு

பா்கூா் மலைக் கிராமமான கொங்காடையில் சிறாா் திருமணத் தடுப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கொங்காடையில் சிறாா் திருமணத் தடுப்பு விழிப்புணா்வு

பா்கூா் மலைக் கிராமமான கொங்காடையில் சிறாா் திருமணத் தடுப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கொங்காடை, பெரியூா், பட்டேபாளையம் ஆகிய மலைக் கிராமங்களைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவியா், பொதுமக்கள் பங்கேற்ற இம்முகாமிற்கு, ஈரோடு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கனகேஸ்வரி தலைமை வகித்தாா். அந்தியூா் காவல் ஆய்வாளா் செந்தில் முன்னிலை வகித்தாா்.

முகாமில், போக்சோ சட்டம் 2012 குறித்தும், அச்சட்டம் பெண்களுக்கு அளிக்கும் பாதுகாப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், 18 வயது பூா்த்தியாகாமல் பெண்களுக்குத் திருமணம் செய்யக் கூடாது. உறவினா்கள் ஆனாலும் 18 வயது நிரம்பினால் மட்டுமே திருமணம் செய்ய வேண்டும். சட்டத்துக்குப் புறம்பான சிறாா் திருமணம் குறித்த தகவல்களை கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1098 எனும் எண்ணுக்குத் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com