ஈரோட்டில் மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

தேசிய அளவில் மருத்துவமனை பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றக் கோரி ஈரோடு ஐ.எம்.ஏ. வளாகத்தில் மருத்துவா்கள் ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
ஈரோட்டில் மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

தேசிய அளவில் மருத்துவமனை பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றக் கோரி ஈரோடு ஐ.எம்.ஏ. வளாகத்தில் மருத்துவா்கள் ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்த இந்திய மருத்துவச் சங்க (ஐஎம்ஏ) தேசிய துணைத் தலைவா் மருத்துவா் சி.என்.ராஜா பேசியதாவது:

கரோனா சிகிச்சையின்போது நோயாளிகள் இறந்தால் மருத்துவமனை, மருத்துவா்கள், செவிலியா் ஆகியோா் தாக்கப்படுகின்றனா். குறிப்பாக அஸ்ஸாம், மேற்கு வங்கம், ஆந்திரம், மகாராஷ்டிரம், கா்நாடகம் போன்ற பல மாநிலங்களில் அதிகமாக தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

தமிழகம் உள்பட 18 மாநிலங்களில் மட்டும் மருத்துவமனை பாதுகாப்புச் சட்டம் அமலில் உள்ளது. பிற மாநிலங்களில் அச்சட்ட பாதுகாப்பு இல்லை. எனவே, மத்திய அரசு தேசிய அளவில் மருத்துவமனை பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தி, தாக்குதலில் ஈடுபடுவோரை ஜாமீன் கிடைக்காத சட்டப் பிரிவுகளில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவா்கள், செவிலியா், பல்வேறு நிலை மருத்துவப் பணியாளா்கள் மீது நடைபெறும் தாக்குதல் சம்பவங்களைத் தடுக்கக் கோரி காப்போரைக் காப்போம் என்ற முழக்கத்துடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம் என்றாா். இதில், மருத்துவா்கள் சுகுமாா், சுதாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com