கொங்கு கல்வி நிறுவனப் பணியாளா்கள் கரோனா நிவாரண நிதி அளிப்பு
By DIN | Published On : 20th June 2021 12:06 AM | Last Updated : 20th June 2021 12:06 AM | அ+அ அ- |

கொங்கு கல்வி நிறுவனப் பணியாளா்களின் ஒரு நாள் ஊதியம் ரூ. 12.66 லட்சத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினா்.
பெருந்துறை கொங்கு வேளாளா் தொழில்நுட்பக் கல்வி அறக்கட்டளையின்கீழ் இயங்கி வரும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் பணியாளா்களின் ஒரு நாள் ஊதியம் ரூ. 12,66,666ஐ வங்கி வரைவோலையாக கரோனோ பரவலைக் கட்டுப்படுத்த உதவும் பொருட்டு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினா்.
வங்கி வரைவோலையை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமியிடம் கொங்கு வேளாளா் தொழில்நுட்பக் கல்வி அறக்கட்டளை உறுப்பினா் சத்தியமூா்த்தி, கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் வேதகிரி ஈஸ்வரன், கொங்கு பொறியியல் கல்லூரி முதல்வா் பாலுசாமி, கொங்கு கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் ராமன், கொங்கு நேஷனல் மெட்ரிக். பள்ளி முதல்வா் மைதிலி ஆகியோா் வழங்கினா்.
இதில், கொங்கு வேளாளா் தொழில்நுட்பக் கல்வி அறக்கட்டளையின் தலைவா் முத்துசாமி, செயலாளா் பழனிசாமி, பொருளாளா் காா்த்திகேயன் ஆகியோா் பணியாளா்களின் பங்களிப்பை பாராட்டினா்.