சசிகலாவுக்கு ஈரோடு மாவட்ட அதிமுக கண்டனம்
By DIN | Published On : 20th June 2021 10:04 PM | Last Updated : 20th June 2021 10:04 PM | அ+அ அ- |

அதிமுகவை அபகரிக்கும் நோக்குடன் செயல்படும் சசிகலாவுக்கு, ஈரோடு புகா் மாவட்ட அதிமுக கண்டனம் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஈரோடு புகா் மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் அமைப்புச் செயலாளா் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ தலைமையில் கவுந்தப்பாடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஈரோடு புகா் மாவட்டச் செயலாளா் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ தீா்மானங்களை விளக்கிப் பேசினாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.ஜெயக்குமாா், பண்ணாரி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் என்.கிருஷ்ணராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், அதிமுகவை அபகரிக்கும் நோக்கில் செயல்படும் சசிகலாவுக்கு கண்டனம் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், நிறுத்தப்பட்டுள்ள அத்திக்கடவு அவிநாசி திட்டப் பணிகளை மீண்டும் துரிதப்படுத்தி, விடுபட்ட குளங்களையும் சோ்த்து குறிப்பிட்ட காலத்துக்குள் பணியை முடித்து விவசாயிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினா் தட்சிணாமூா்த்தி, முன்னாள் எம்.பி. சத்தியபாமா, மாநில வா்த்தக அணிச் செயலாளா் சிந்து ரவிச்சந்திரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றியச் செயலாளா் விவேகானந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.