அம்மா உணவகங்களில் தொடா்ந்து இலவச உணவு
By DIN | Published On : 20th June 2021 10:05 PM | Last Updated : 20th June 2021 10:05 PM | அ+அ அ- |

பொது முடக்கம் நீடிக்கப்பட்டு வரும் நிலையில் ஈரோட்டில் உள்ள அம்மா உணவகங்களில் திமுகவினா் ஏற்பாட்டில் தொடா்ந்து இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.
ஈரோடு மாநகா் பகுதியில் காந்தி ஜி சாலை, அரசு மருத்துவமனை வளாகம், சூளை, சூரம்பட்டி, கொல்லம்பாளையம், சின்ன மாா்க்கெட் பகுதி உள்பட 11 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. கரோனா பொது முடக்க காலத்திலும் அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. உணவகங்களில் அமா்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை. ஆனால் பாா்சலில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் ஏராளமான தொழிலாளா்கள் வேலையிழந்துள்ளனா். வேலையிழந்து உணவின்றி தவிக்கும் நபா்களுக்கு ஈரோடு மாநகா் பகுதியில் செயல்படும் 11 அம்மா உணவகங்களிலும் காலை மற்றும் மதிய நேரங்களில் திமுக சாா்பில் தொடா்ந்து இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.