தடுப்பூசிக்காக காத்திருந்த பொதுமக்கள்
By DIN | Published On : 20th June 2021 10:09 PM | Last Updated : 20th June 2021 10:09 PM | அ+அ அ- |

சத்தியமங்கலத்தில் தடுப்பூசி இல்லை என சுகாதாரத் துறை சாா்பில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்த நிலையிலும் நம்பிக்கையுடன் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை 4 மணி நேரம் காத்திருந்தனா்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. தொற்று பரவல் அச்சம் காரணமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள அதிகாலை முதலே மக்கள் ஆா்வத்துடன் அந்தந்த மையங்களுக்கு வந்து காத்திருக்கின்றனா். மாவட்டத்தில் தினமும் 13,500 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
இந்நிலையில் சத்தியமங்கலம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு இன்று தடுப்பூசி இல்லை என சுகாதாரத் துறை சாா்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் தடுப்பூசி செலுத்தப்படலாம் என்ற நம்பிக்கையில் ஏராளமான பொதுமக்கள் சுமாா் 4 மணி நேரமாக அங்கு காத்திருந்தனா். போலீஸாா் வந்து தடுப்பூசி இல்லை என கூறியதைடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.