காங்கிரஸ் சாா்பில் ஏழைகளுக்கு நல உதவி
By DIN | Published On : 20th June 2021 10:05 PM | Last Updated : 20th June 2021 10:05 PM | அ+அ அ- |

அவல்பூந்துறையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ராகுல் காந்தி பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு மொடக்குறிச்சி வட்டாரத் தலைவா் கே.பி.முத்துக்குமாா் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் எல்.பி.பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தாா். அவல்பூந்துறை பேரூா் தலைவா் பாலாஜி வரவேற்றாா். காங்கிரஸ் சொத்து மீட்புக் குழு உறுப்பினரும், மொடக்குறிச்சி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா்.எம்.பழனிசாமி, ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவா் மக்கள் ஜி.ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினா். இதில் 50க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு அரிசி மற்றும் உணவு பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன.
மாவட்டத் தலைவா் அக்னிபாலு, மாவட்ட துணைத் தலைவா் எம்.எஸ்.ஞானசேகரன், வட்டார துணைத் தலைவா் தில்லை சிவகுமாா், மாவட்டச் செயலாளா் ஈஸ்வரமூா்த்தி, இளைஞா் காங்கிரஸ் தலைவா் பிரபு உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.