சத்தி அருகே ஓடும் காரில் தீ விபத்து
By DIN | Published On : 29th June 2021 04:50 AM | Last Updated : 29th June 2021 04:50 AM | அ+அ அ- |

தீ விபத்தில் சேதமடைந்த காா்.
சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்துள்ள புன்செய் புளியம்பட்டியில் ஓடும் காரில் ஏற்பட்ட தீ விபத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா் திங்கள்கிழமை உயிா்தப்பினாா்.
சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய் புளியம்பட்டியைச் சோ்ந்தவா் அந்தோணி ஜெரால்டு. அரசுப் பள்ளி ஆசிரியா். இவா், தனது ஆம்னி காரில் வீட்டில் இருந்து திங்கள்கிழமை புறப்பட்டாா். சிறிது தூரம் சென்றபோது காரில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறுவதைக் கண்டு காரை நிறுத்தியுள்ளாா். அப்போது, திடீரென காரில் தீப்பற்றிது. உடனடியாக காரில் இருந்து வெறியேறியதால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதையடுத்து அப்பகுதி மக்கள் தண்ணீா் ஊற்றி காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனா். கேஸ் சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டதால் காா் தீப்பிடித்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து புன்செய் புளியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.