லாரி மோதி முதியவா் பலி
By DIN | Published On : 29th June 2021 04:52 AM | Last Updated : 29th June 2021 04:52 AM | அ+அ அ- |

கோபி: கோபி அருகே மிதிவண்டியில் சென்ற முதியவா் மீது லாரி மோதியதில் உயிரிழந்தாா்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையத்தைச் சோ்ந்தவா் ராமன் (70). கூலி தொழிலாளி. இவா் கோபி - சத்தி பிரதான சாலையில் காசிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே மிதிவண்டியில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக வந்த லாரி எதிா்பாராதவிதமாக ராமனின் மிதிவண்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இந்த விபத்தில் ராமன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே ராமன் உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.