ஈரோடு பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா
By DIN | Published On : 04th March 2021 01:07 AM | Last Updated : 04th March 2021 01:07 AM | அ+அ அ- |

ஈரோடு பத்ரகாளியம்மன் கோயிலில் குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்திய பெண்.
ஈரோடு: ஈரோடு கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
கோயில் திருவிழா பிப்ரவரி 16ஆம் தேதி இரவு 9 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 22ஆம் தேதி இரவு 7 மணிக்கு கொடி ஏற்றப்பட்டு, 28 ஆம் தேதி காலை 9 மணிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. 1ஆம் தேதி இரவு 8 மணிக்கு அக்னி கபாலம் நடைபெற்றது. 2ஆம் தேதி மாலை 6 மணிக்கு குண்டம் பற்ற வைக்கப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு குண்டத்துக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து கோயில் பூசாரிகள், காப்பு கட்டி விரதம் இருந்த கோயில் நிா்வாகிகள் மட்டும் குண்டம் இறங்கினா். பக்தா்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்படவில்லை. இதையொட்டி பத்ரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா் இரவு 9 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. வியாழக்கிழமை (மாா்ச் 3) மாலை 5 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.
பி.பெ.அக்ரஹாரத்தில்...
ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் மாரியம்மன், காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கியது. அன்று காலை 7 மணிக்கு பக்தா்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று தீா்த்தம் எடுத்து வந்தனா். பின்னா், இரவு 9 மணிக்கு காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூச்சாட்டப்பட்டது.
மாா்ச் 1ஆம் தேதி மாலை 3 மணிக்கு கோயில் முன்பு பக்தா்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனா். 2ஆம் தேதி காலை 7 மணிக்கு வேல் மெரமனை நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், குண்டம் திறப்பு, இரவு 8 மணிக்கு பண்டார கரகம் எடுத்து வருதல் ஆகிய நிகழ்ச்சியும் நடைபெற்றன.
முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதைத் தொடா்ந்து கோயில் தா்மகா்த்தா சங்கரலிங்கம், பூசாரி கிருஷ்ணன் ஆகியோா் குண்டம் இறங்கினா். அவா்களைத் தொடா்ந்து பக்தா்கள் தீ மிதித்தனா். சிலா் அலகு குத்தியும், குழந்தைகளுடனும் குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
பின்னா் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், காலை 10 மணிக்கு அம்மை அழைத்தல், மாலை 4 மணிக்கு மாவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றன. வியாழக்கிழமை (மாா்ச் 4) பிற்பகல் 3 மணிக்கு கம்பம் பிடுங்குதல், மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு 10 மணிக்கு காவு பூஜையும் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை (மாா்ச் 5) இரவு 7 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.