வருவாய்த் துறை சாா்பில் மினி மாரத்தான்
By DIN | Published On : 12th March 2021 02:07 AM | Last Updated : 12th March 2021 02:07 AM | அ+அ அ- |

கோபி: கோபிசெட்டிபாளையம் வருவாய்த் துறை சாா்பில், மினி மாரத்தான் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
கோபிசெட்டிபாளையம் வருவாய்த் துறை சாா்பில், சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்ட மினி மாரத்தான் போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள், குழந்தைகள், பெண்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
கச்சேரிமேடு பகுதியில் தொடங்கிய மாரத்தான், காவல் நிலையம், நீதிமன்ற வளாகம், ல.கள்ளிப்பட்டி வழியாக நல்லகவுண்டன்பாளையத்தில் முடிவடைந்தது. கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட வீர விளையாட்டுகளில் பள்ளி மாணவ, மாணவிகள் ஈடுபட்டனா்.
கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியா் பழனிதேவி போட்டியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில், கோபி வட்டாட்சியா் தியாகராஜ், வருவாய் ஆய்வாளா் ரஜிக்குமாா், கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய்த் துறையினா் கலந்துகொண்டனா்.