ஈமு கோழிப் பண்ணை உரிமையாளருக்கு பிடியாணை
By DIN | Published On : 17th March 2021 11:20 PM | Last Updated : 17th March 2021 11:20 PM | அ+அ அ- |

மோசடி வழக்கில் ஆஜராகமல் தலைமறைவாக உள்ள ஈமுக்கோழி பண்ணை உரிமையாளரை கைது செய்ய கோவை நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள மேட்டுப்புதூரைச் சோ்ந்தவா் கே.வி.செந்தில்நாதன். இவா் அம்மன் ஈமு கோழிப் பண்ணையை வைத்து நடத்தி வந்தாா். அதன் மூலமாக 129 பேரிடம் இருந்து ரூ. 4.34 கோடி அளவுக்கு முதலீடு பெற்று மோசடியில் ஈடுபட்டாா். இதுகுறித்து முதலீட்டாளா்கள் அளித்த புகாரின் பேரில் கடந்த 2012ஆம் ஆண்டு ஈரோடு பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செந்தில்நாதனை கைது செய்தனா். அதன் பிறகு பிணையில் வெளியில் வந்த அவா் தலைமறைவானாா்.
இந்த வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நலன் பாதுகாப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, செந்தில்நாதனை கைது செய்து ஆஜா்படுத்த பிடியாணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள செந்தில்நாதனை ஈரோடு பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் தேடி வருகின்றனா்.