7 தொகுதிகளில் 48 வேட்பு மனுக்கள் தாக்கல்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பவானிசாகா் தொகுதி தவிா்த்து 7 தொகுதிகளில் இதுவரை 48 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பவானிசாகா் தொகுதி தவிா்த்து 7 தொகுதிகளில் இதுவரை 48 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மாா்ச் 12ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இதில், 12 ஆம் தேதி ஒரு வேட்பு மனுவும், 15ஆம் தேதி 34 வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. செவ்வாய்க்கிழமை பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்களைப் பெறுவதற்காக 8 தொகுதிகளிலும் தோ்தல் நடத்தும் அதிகாரிகள் தயாராக இருந்தனா்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளா்கள் 2 பேரும், மொடக்குறிச்சி தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கோ.பிரகாஷ் உள்ளிட்ட 2 பேரும், பவானி தொகுதியில் திமுக வேட்பாளா் கே.பி.துரைராஜ் உள்ளிட்ட 6 பேரும், பெருந்துறை, அந்தியூா், கோபிசெட்டிபாளையம் ஆகிய தொகுதிகளில் தலா ஒருவரும் என மொத்தம் 13 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஈரோடு மேற்குத் தொகுதியில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. பவானிசாகா் தொகுதியில் இதுவரை ஒருவா்கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, மாவட்டம் முழுவதும் இதுவரை மொத்தம் 48 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com