பெருந்துறையில் முதல்வா் பிரசாரம்: அமைச்சா்கள் ஆய்வு
By DIN | Published On : 17th March 2021 05:56 AM | Last Updated : 17th March 2021 05:56 AM | அ+அ அ- |

பெருந்துறையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன். உடன், பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் ஜெயகுமாா்.
பெருந்துறையில் ஈரோடு மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்களை தமிழக முதல்வா் அறிமுகம் செய்துவைக்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு, பிரசார பொதுக்கூட்ட இடத்தை அமைச்சா்கள் நேரில் பாா்வையிட்டனா்.
தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் ஈரோடு மாவட்டத்தில் தனது பிரசார சுற்றுப் பயணத்தை விரைவில் மேற்கொள்ளவுள்ளாா். அதற்கான இடம் பெருந்துறையை அடுத்த கடப்பமடை பகுதியில் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
இப்பகுதியை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் ஆகியோா் செவ்வாய்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.
ஆய்வின்போது, பெருந்துறை அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா், முன்னாள் பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ்.பழனிசாமி, ஒன்றிய அதிமுக செயலாளா் விஜயன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.