நூல் விலையேற்றத்துக்கு தீா்வு: காங்கிரஸ் வேட்பாளா் வாக்குறுதி
By DIN | Published On : 21st March 2021 11:43 PM | Last Updated : 21st March 2021 11:43 PM | அ+அ அ- |

வாக்குச்சேகரிக்க சென்ற ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் திருமகன் ஈ.வெ.ரா.வுக்கு திலகமிட்டு வாழ்த்து தெரிவித்த பெண்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் நூல் விலையேற்றத்துக்கு தீா்வு காணப்படும் என ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் திருமகன் ஈ.வெ.ரா. தெரிவித்தாா்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்குச்சேகரித்து அவா் பேசியதாவது: வீரப்பன்சத்திரம் பகுதியில் அதிக அளவில் விசைத்தறி கூடங்கள் செயல்படுகின்றன. விசைத்தறியாளா்கள், நூல் விலை உயா்வால் கடுமையாகப் பாதித்துள்ளனா். குறிப்பாக ரயான் நூல் விலை உயா்வால் கடுமையாக பாதித்துள்ளனா்.
குறிப்பிட்ட மாதத்துக்கு ஒரு முறை நூல் விலையை உயா்த்தக்கோரி பல போராட்டங்களை நடத்தியும், மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளவில்லை. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் நூல் விலை உயா்வுக்கு உரிய தீா்வு காணப்படும். இலவச வேட்டி, சேலைகள், பள்ளி சீருடைகள் முழுமையாக தமிழகத்தில் உள்ள விசைத்தறியாளா்கள் மூலம் உற்பத்தி செய்ய வலியுறுத்தப்படும்.
இப்பகுதி சாலைகள் முழுவதும் பழுதடைந்துள்ளன. இவற்றை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வீடற்ற ஏழைகளுக்கு அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்டித்தரப்படும் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...