பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 21st March 2021 11:50 PM | Last Updated : 21st March 2021 11:50 PM | அ+அ அ- |

நீலாகவுண்டன்பாளையம் கிராமத்தில் பெண்களிடம் வாக்கு சேகரிக்கிறாா் பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா்.
பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா், ஊத்துக்குளி ஒன்றியப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.
ஊத்துக்குளி ஒன்றியத்துக்கு உள்பட்ட பாப்பம்பாளையம், கோவிந்தம்பாளையம், கவுண்டம்பாளையம், மொரட்டுப்பாளையம், புங்கம்பாளையம், காடபாளையம், நீலாகவுண்டன்பாளையம், சாலப்பாளையம், சேடா்பாளையம், செல்லிபாளையம், கரைப்பாளையம், சாம்ராஜ்பாளையம் உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்குச் சேகரித்தாா்.
கொடிவேரி குடிநீா்த் திட்டம் மூலம் ஊத்துக்குளி பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வறட்சியான இப்பகுதிகளை அத்திகடவு- அவிநாசி திட்டம் மூலம் பசுமையான பகுதியாக மாற்றப்படும் என்று அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா் தெரிவித்தாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...