சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை
By DIN | Published On : 25th March 2021 02:58 AM | Last Updated : 25th March 2021 02:58 AM | அ+அ அ- |

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டைனை விதித்து ஈரோடு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
ஈரோடு, வீரப்பன்சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தன் மகன் சுரேஷ்குமாா் (32), தொழிலாளி. இவா் கடந்த 2020 மே 21ஆம் தேதி கோபியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளாா். அப்போது, வீட்டின் அருகில் வசிக்கும் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
இது குறித்த புகாரின்பேரில் கோபி அனைத்து மகளிா் போலீஸாா் சுரேஷ்குமாரைக் கைது செய்தனா். இந்த வழக்கு ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆா்.மாலதி புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.
இதில் குற்றம்சாட்டப்பட்ட சுரேஷ்குமாருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்தாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணத் தொகையாக ரூ.5 லட்சம் வழங்க தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்தாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் ஜி.டி.ஆா்.சுமதி ஆஜராகினாா்.