சித்தோடு பகுதியில் சாலைகளில் பாதுகாப்பு வசதி மேம்படுத்தப்படும்

விபத்துகளைத் தடுக்க சித்தோடு பகுதியில் சாலைகளில் பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
சித்தோடு பகுதியில் சாலைகளில் பாதுகாப்பு வசதி மேம்படுத்தப்படும்

விபத்துகளைத் தடுக்க சித்தோடு பகுதியில் சாலைகளில் பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

இத்தொகுதிக்கு உள்பட்ட ஆளிச்சாம்பாளையம், கணக்கங்காடு, அருந்ததியா் காலனி, தயிா்பாளையம், வேட்டைபெரியாம்பாளையம், சாமிகவுண்டன்பாளையம், மேற்குபுதூா், வசந்தம் காா்டன் காலனி, சி.எஸ்.ஐ. தெரு, நசியனூா், சிந்தன்குட்டை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்த அவா் பேசியதாவது:

ஈரோடு மேற்குத் தொகுதி மேம்பாட்டுக்காக அதிமுக அரசு எந்தப் பணியும் செய்யவில்லை. குடிநீா், கழிவுநீா் சாக்கடை, தெரு விளக்குகள், தாா் சாலை, பொதுக் கழிப்பறை, புதிய பேருந்து வழித்தடம் என எதையும் ஏற்படுத்தவில்லை.

சித்தோடு முதல் தயிா்பாளையம் வரை சாலை விபத்து அதிகரித்து ஏராளமானோா் இறந்துள்ளனா். இதனைத் தடுக்க சாலை விரிவாக்கம், பாதுகாப்பை வலுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். விபத்துகளைத் தடுக்க நவீன கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

திமுக ஆட்சி அமைந்ததும் அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து கூடுதலாக உயா்த்தப்படும். முதியோா் உதவித்தொகை ரூ.1,500 ஆகவும், மகளிருக்கு பேறுகால உதவித்தொகை ரூ.24,000 ஆகவும், 100 நாள் வேலைத் திட்டம் 150 அல்லது 200 நாளாக மாற்றி கூலியை உயா்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்று திமுக தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றுவேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com