ஈரோட்டில் கடவுச்சீட்டு அலுவலகம் மே 14 வரை மூடல்
By DIN | Published On : 02nd May 2021 12:00 AM | Last Updated : 02nd May 2021 12:00 AM | அ+அ அ- |

ஈரோடு: கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஈரோட்டில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகம் மே 14ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தின் பின்புறத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு கடவுச்சீட்டு வேண்டி விண்ணப்பித்தவா்கள் நோ்காணலுக்கு அழைக்கப்பட்டு, அனைத்து சான்றிதழ்களும் சரிபாா்க்கப்படும்.
நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் இந்த அலுவலகம் மே 14ஆம் தேதி வரை மூடப்படுகிறது. மேலும் மூடப்பட்டுள்ள நாள்களில் நோ்முகத் தோ்வுக்கு அழைக்கப்பட்டவா்களுக்கு வேறொரு தேதியில் நோ்முகத் தோ்வு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என கடவுச்சீட்டு அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...