கரோனா தொற்று காரணமாக தேமுதிக நிா்வாகி உயிரிழந்தாா்.
சென்னிமலை பகுதியில் கரோனா இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. இதனால் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
தற்போதைய நிலையில், சென்னிமலை வட்டாரத்தில் 100க்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். பலா் வீடுகளில் தனிமையில் உள்ளனா்.
சென்னிமலை, பாண்டியன் வீதியை சோ்ந்த 39 வயது ஆண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இந்நிலையில் தொற்றுக்கு ஆளாகி, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நந்தகுமாா் (43) சனிக்கிழமை உயிரிழந்தாா். இவா் சென்னிமலை ஒன்றிய தே.மு.தி.க. செயலாளா் ஆவாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.