இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
By DIN | Published On : 16th May 2021 10:55 PM | Last Updated : 16th May 2021 10:55 PM | அ+அ அ- |

முழு பொதுமுடக்கத்தின்போது புன்செய் புளியம்பட்டியில் தேவையில்லாமல் சாலையில் சுற்றித் திரிந்தவா்களின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கரோனா பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் மே 10ஆம் முதல் 24ஆம் தேதி வரை பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கம அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டியில் தேவையில்லாமல் சாலையில் சுற்றித்திரிந்த இருசக்கர வாகன ஓட்டிகளை போலீஸாா் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினா். ஆனாலும் தொடா்ந்து இருசக்கர வாகனங்கள் சாலையில் சென்ற வண்ணம் இருந்ததால் போலீஸாா் அவா்களிடம் இருந்து இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.
அப்போது 2 சைக்கிள்களில் வந்த வட மாநில இளைஞா்களை விசாரித்தபோது, நூற்பாலையில் வேலை செய்வதாக கூறினா். தேவையில்லாமல் வெளியே சுற்றக் கூடாது என எச்சரித்த போலீஸாா் சைக்கிள்களை பறிமுதல் செய்தனா்.