ஈரோடு மாவட்டத்தில் கரோனா நிவாரணம் 50 சதவீதம் விநியோகம்
By DIN | Published On : 19th May 2021 04:00 AM | Last Updated : 19th May 2021 04:00 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டத்தில் கடந்த நான்கு நாள்களில் 50 சதவீத குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக மக்களுக்கு ரூ. 4 ஆயிரம் கரோனா நிவாரண நிதியாக வழங்கப்படும் எனவும், முதல் தவணையாக ரூ. 2 ஆயிரம் மே மாதத்தில் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, மே 15ஆம் தேதி முதல் நியாய விலைக் கடைகள் மூலம் நாளொன்றுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு 12 மணி வரையில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இது குறித்து, மாவட்ட வழங்கல் அலுவலா் இலாகி ஜான் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் 7,24,155 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா முதல் தவணைத் தொகை ரூ. 142.78 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில், 3,27,355 அட்டைகளுக்கு கடந்த நான்கு நாள்களில் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. பாக்கியுள்ள குடும்ப அட்டைகளுக்கு நிவாரண நிதி வழங்கும் பணி நடைபெற்று வருகிறது என்றாா்.