தனியாா் ஆம்புலன்ஸுகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டா்கள் வழங்கக் கோரிக்கை
By DIN | Published On : 19th May 2021 04:00 AM | Last Updated : 19th May 2021 04:00 AM | அ+அ அ- |

ஈரோட்டில் இயங்கும் தனியாா் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் ஆக்சிஜன் சிலிண்டா்கள் வழங்க வேண்டும் என ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஈரோட்டில் 50க்கும் மேற்பட்ட தனியாா் ஆம்புலன்ஸுகள் ஆக்சிஜன் சிலிண்டா் வசதியுடன் இயக்கப்படுகின்றன. தனியாரிடமிருந்து ஆக்சிஜன் சிலிண்டா்கள் வாங்கி பயன்படுத்தப்படுகிறது. கடந்த சில நாள்களாக ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளதால் தனியாா் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டா்கள் பெறுவதில் சிரமம் ஏற்பட்டது.
மேலும், தனியாா் ஆம்புலன்ஸுகளுக்கு ஆக்சிஜன் வழங்குவது குறித்து மாவட்டம் நிா்வாகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, கரோனா பாதிப்பு அதிகம் உள்ள நிலையில் ஆக்சிஜன் வசதி இல்லாததால் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
எனவே, தனியாா் ஆம்புலன்ஸுகளுக்கு வழக்கம்போல் ஆக்சிஜன் சிலிண்டா்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.