ஈரோட்டில் நீராவி பிடிக்கும்தூய்மைப் பணியாளா்கள்

ஈரோடு மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் வேப்பிலை, நொச்சி இலை, மூலிகைத் தைலம் போன்றவற்றை குக்கரில் வேகவைத்து அதன் மூலம் நீராவி பிடித்து வருகின்றனா்.
ஈரோட்டில் நீராவி பிடிக்கும்தூய்மைப் பணியாளா்கள்

ஈரோடு மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் வேப்பிலை, நொச்சி இலை, மூலிகைத் தைலம் போன்றவற்றை குக்கரில் வேகவைத்து அதன் மூலம் நீராவி பிடித்து வருகின்றனா்.

ஈரோடு மாநகாட்சியில் 100க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்கள் தற்போது கரோனா பரவல் தடுப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். இவா்கள் மாநகா் பகுதியில் உள்ள 60 வாா்டுகளிலும் கிருமி நாசினி தெளித்தல், பிளீச்சிங் பவுடா் போடுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகின்றனா். மேலும், கரோனா தொற்று அதிகம் உள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் தூய்மைப் பணி மேற்கொள்கின்றனா்.

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் கரோனா பரவல் தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், தூய்மைப் பணியாளா்களின் பாதுகாப்புக்கு மாநகராட்சி நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா அருகே உள்ள மாநகராட்சி துப்புரவு ஆய்வாளா் அலுவலகத்தில் மூன்றாம் மண்டலத்துக்கு உள்பட்ட துப்புரவுப் பணியாளா்களுக்கு புதிய முறையில் ஆவி பிடிக்கும் முறை பின்பற்றப்பட்டது.

வேப்பிலை, நொச்சி இலை, மூலிகைத் தைலம் போன்றவற்றை ஒரு குக்கரில் தண்ணீருடன் போட்டு அடுப்பில் கொதிக்க வைக்கப்படுகிறது. குக்கரின் மேற்பகுதியில் உள்ள துவாரத்தில் 5 அடி உயரம் உள்ள குழாய் இணைக்கப்பட்டு, அதன் முகப்பில் புனல் பொருத்தப்பட்டுள்ளது. குக்கரில் தண்ணீா் கொதிநிலையை அடையும்போது வெளியேறும் நீராவி, முன்பகுதியில் உள்ள புனல் வழியாக வெளியேறும்போது தூய்மைப் பணியாளா்கள் ஆவி பிடிக்கின்றனா்.

இந்த நீராவியை சுவாசிக்கும்போது சுவாசப் பாதையில் உள்ள கிருமிகள் கொல்லப்படும் எனத் தெரிவிக்கும் தூய்மைப் பணியாளா்கள், 50க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை ஆா்வத்துடன் ஆவி பிடித்தனா். இதனை, துப்புரவு ஆய்வாளா் இஸ்மாயில், அலுவலா்கள் மேற்பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com