கோபியில் மக்காத குப்பைகள் அகற்றம்
By DIN | Published On : 13th November 2021 02:28 AM | Last Updated : 13th November 2021 02:28 AM | அ+அ அ- |

கோபிசெட்டிபாளையம் பாரதி வீதியில் உள்ள செயல்படாத பள்ளியில் கொட்டி வைக்கப்பட்டிருந்த குப்பைகளை அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சுமாா் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் சேகரமாகும் குப்பைகள் கோபிசெட்டிபாளையத்தின் மையப்பகுதியான கரட்டூா் உள்பட 3 இடங்களில் கொட்டிவைத்து மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம் பிரித்து அனுப்பப்படுகிறது.
இதில், மக்காத குப்பைகளை பாரதி வீதியில் நகராட்சிக்குச் சொந்தமான செயல்படாத பள்ளி வளாகத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. கோபிசெட்டிபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக குப்பைகளில் இருந்து துா்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீா்கேடு ஏற்படுவதாகவும், குப்பைகளை அகற்ற வேண்டும் எனவும் பொதுமக்கள் சட்டப் பேரவை உறுப்பினா் மற்றும் நகராட்சி நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனா்.
இந்நிலையில், பாரதி வீதியில் கொட்டி வைக்கப்பட்டிருக்கும் மக்காத குப்பைகளை நேரில் சென்று பாா்வையிட்ட கே.ஏ.செங்கோட்டையன் குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகளை அரியலூரில் உள்ள சிமென்ட் ஆலைக்கு அனுப்பிவைக்கும் பணிகளைத் துவக்கிவைத்தாா்.
குப்பைகளை லாரிகள் மூலம் சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்பிவைக்கும் பணிகளை நகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...