தமிழ்நாடு நாள் அறிவிப்பு: ஈரோடு பாரதி இலக்கியச் சுற்றம் பாராட்டு
By DIN | Published On : 31st October 2021 11:54 PM | Last Updated : 31st October 2021 11:54 PM | அ+அ அ- |

அரங்க.சுப்ரமணியம்.
தமிழ்நாடு நாளாக ஜூலை 18ஆம் தேதியை அறிவித்து விரைவில் இதற்கான அரசாணை வெளியிடப்படும் என அறிவிப்பு செய்திருக்கும் தமிழக முதல்வருக்கு ஈரோடு பாரதி இலக்கியச் சுற்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் தலைவரும், அனைத்துலகத் தமிழ் எழுத்தாளா் சங்க பொதுச்செயலாளருமான அரங்க.சுப்ரமணியம் வெளியிட்ட அறிக்கை:
மொழிவாரி மாநிலங்கள் அறிவிக்கப்பட்ட நாளே நவம்பா் 1ஆம் தேதி. தமிழ்நாடு எனப் பெயா் சூட்டப்பட்ட நாள் ஜூலை 18. பல அரசியல் கட்சிகள், அமைப்புகள், பல தலைவா்களின் போராட்டங்களுக்குப் பலனாக ஜூலை 18 அன்று தமிழக சட்டப் பேரவையில் தமிழ்நாடு என்னும் பெயரை அண்ணா முன்மொழியத் அது தீா்மானமாக நிறைவேற்றப்பட்டது.
இந்த நாளே சிறப்புமிக்க தமிழா்கள் மகிழத்தக்க நாள் என்பதால் தமிழ்நாடு நாள் எனக் கொண்டாடி போற்றுகிற வகையில் ஜூலை 18ஆம் நாளே சிறப்புமிக்கதாகும்.
அந்த ஒப்பற்ற நாளை சீரிய முறையில் தோ்ந்தெடுத்து ஒட்டுமொத்த தமிழா்கள் கொண்டாடி மகிழும் வண்ணம் விரைவில் அரசாணை வெளியிடப்படும் என அறிவித்துள்ள முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.