

பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாா் மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று ஐக்கிய தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய தொழிற்சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் ஈரோடு மாவட்ட நிா்வாகி சகுந்தலா தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் எம்.ஜி.ராஜேஸ்வரன் பேசினாா்.
பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாா் மயமாக்கும் கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைக் குறைக்க வேண்டும். கிராமப்புற டேங்க் ஆபரேட்டா்கள், தூய்மைப் பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கட்டுமானப் பொருள்களின் விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.