விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் கான்கிரீட் தளம் அமைக்கப்படும்: அமைச்சர் சு.முத்துசாமி 

பவானிசாகர் அணையிலிருந்து செயல்படுத்தப்படும் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர்
விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் கான்கிரீட் தளம் அமைக்கப்படும்: அமைச்சர் சு.முத்துசாமி 

சத்தியமங்கலம்: பவானிசாகர் அணையிலிருந்து செயல்படுத்தப்படும் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கீழ்பவானி வாய்க்காலில் அவ்வப்போது சில இடங்களில் உடைப்பு ஏற்படுவதாலும், கடைமடைக்கு தண்ணீர் சென்று சேராததால் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

கான்கிரீட் தளம் அமைப்பதால் வாய்க்காலில் இருந்து கசிவு நீர் வெளியேறாமல் தடுக்கப்பட்டு கசிவு நீர் பாசன பகுதியில் உள்ள நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் நிலம் தரிசாக மாறும் அபாயம் உள்ளதாக பல்வேறு விவசாய சங்கங்கள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி இன்று பவானிசாகர் அணை அருகே உள்ள தொப்பம்பாளையம் பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகளிடம் இது குறித்து விபரங்களை கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.

கீழ்பவானி வாய்க்காலில் கசிவு நீர் பாசன பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்காத வகையிலும், கடைமடை பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் சென்று சேரும் வகையில் கான்கிரீட் தளம் அமைக்கப்படும். 

வாய்க்காலின் தரைப்பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்காமல் வாய்க்கால் கரை உடைப்பு ஏற்படும் இடங்களை கண்டறிந்து அந்த இடங்களில் மட்டுமே கரையோரத்தில் மட்டும் கான்கிரீட் தளம் அமைக்கப்படும் என தெரிவித்தார். 

மேலும் எந்த ஒரு விவசாய நிலமும் பாதிக்காமல் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என விவசாயிகளுக்கு உறுதியளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com