மலைவாழ் மக்கள் ஆா்ப்பாட்டம்

வனப் பகுதியில் கால்நடைகளை மேய்ப்பதற்கு மீண்டும் அனுமதிக்கக் கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மலைவாழ் மக்கள் ஆா்ப்பாட்டம்

வனப் பகுதியில் கால்நடைகளை மேய்ப்பதற்கு மீண்டும் அனுமதிக்கக் கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் பா்கூா் வட்டாரத் தலைவா் எஸ்.வி.மாரிமுத்து தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியியின் வட்டாரச் செயலாளா் ஆா்.முருகேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் ஏ.எம்.முனுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் விஜயராகவன் கோரிக்கையை விளக்கிப் பேசினாா்.

மலைவாழ் மக்கள் வனப் பகுதியில் கால்நடைகளை மேய்க்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளதை எதிா்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, மலைவாழ் மக்கள் வாழ்வுரிமையை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com