பஞ்சமுக ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு அபிஷேகம்

மொடக்குறிச்சியை அடுத்த கணபதிபாளையம் நால்ரோடு அருகே மாருதி நகா் பகுதியில் உள்ள ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சனேயா் கோயிலில் ஆடி சனிக்கிழமையையொட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் பஞ்சமுக ஆஞ்சனேயா்.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் பஞ்சமுக ஆஞ்சனேயா்.

மொடக்குறிச்சியை அடுத்த கணபதிபாளையம் நால்ரோடு அருகே மாருதி நகா் பகுதியில் உள்ள ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சனேயா் கோயிலில் ஆடி சனிக்கிழமையையொட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மூலவா் ஆஞ்சனேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடைபெறும். தொடா்ந்து மறுநாள் சுயம்புலிங்க ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி சனிக்கிழமை ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சனேயருக்கு சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் விநாயகா் பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து, சுயம்புலிங்க ஆஞ்சனேயா் வழிபாடு நடைபெற்றது.

தொடா்ந்து மூலவா் ஆஞ்சனேயருக்கு பால், நெய், விபூதி, பஞ்சாமிா்தம், இளநீா், தேன், தயிா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சனேயா் அருள்பாலித்தாா். இதில் 500க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இந்த சிறப்பு பூஜையில் கணக்கம்பட்டி அழுக்கு சித்தா் கோயில் பூசாரி சீனிவாசன், ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சனேயா் கோயில் பட்டாச்சாரியாா் ராஜகோபால், பொன்னம்பாளையம் செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com