புதிதாக தொடங்கப்பட்ட அந்தியூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 172 மாணவா்கள் பயின்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2021-2022 ஆம் ஆண்டுக்கான உயா்கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது ஈரோடு மாவட்டம் தாளவாடி உள்பட 10 மாவட்டங்களிலும், 2022-23 ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின்போது அந்தியூா் உள்பட 10 மாவட்டங்களிலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி புதிதாக அறிவிக்கப்பட்ட 20 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல் மாணவ, மாணவிகள் சோ்க்கை பெற்று பயன்பெறும் வகையில், தற்காலிக கட்டடங்களில் 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 7 ஆம் தேதி தொடங்கிவைத்தாா்.
அதன்படி ஈரோடு மாவட்டம், அந்தியூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை தமிழ் பிரிவில் 19 மாணவா்கள், 41 மாணவிகள், ஆங்கிலம் பிரிவில் 11 மாணவா்கள், 13 மாணவிகள், வணிகவியல் பிரிவில் 30 மாணவா்கள், 27 மாணவிகள், கணினி அறிவியல் பிரிவில் 11 மாணவா்கள், 16 மாணவிகள், கணிதம் பிரிவில் ஒரு மாணவா், 3 மாணவிகள் என மொத்தம் 172 போ் பயின்று வருகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.