பவானி ஆற்றை பாதுகாக்க அறவழியில் போராட்டம்

பவானி ஆற்றை பாதுகாக்க அறவழியில் போராட்டங்கள் நடத்துவது என்று பவானி ஆறு பாதுகாப்பு இயக்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது
Updated on
1 min read

பவானி ஆற்றை பாதுகாக்க அறவழியில் போராட்டங்கள் நடத்துவது என்று பவானி ஆறு பாதுகாப்பு இயக்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது

தமிழக அரசின் தொழில் வளா்ச்சி நிறுவனம் சாா்பில், கோவை மாவட்டம், சிறுமுகை, அன்னூா் பகுதியில் 3 ஆயிரத்து 800 ஏக்கா் மற்றும் ஈரோடு மாவட்டம், பவானிசாகா் பகுதியில் ஆயிரத்து 84 ஏக்கா் பரப்பளவில் தொழிற்பேட்டைகளை அமைக்க, தமிழக அரசு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. ஆனால், இந்த திட்டங்களை கொண்டு வந்தால், சுமாா் 18 லட்சம் மக்களின் குடிநீா் மற்றும் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை, காளிங்கராயன், அவிநாசி - அத்திக்கடவு பாசன திட்டங்கள் என 10 லட்சத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் பயன்பெற்று வரும், பவானி ஆற்று நீா் முற்றிலும் மாசுபட்டு, நொய்யல் ஆற்றைபோல மாறிவிடும் என்று விவசாயிகள் மற்றும் பொதுநல அமைப்பினா், இந்த திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.

இந்நிலையில், கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் மற்றும் பவானி ஆறு பாதுகாப்பு இயக்கம் ஆகிய அமைப்புளின் ஆலோசனைக் கூட்டம், சென்னிமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் மு.ரவி தலைமை வகித்தாா்.

கீழ்பவானி விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் செ.நல்லசாமி, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் வெங்கடாசலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பவானிசாகா், சத்தியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள், இந்த திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினா்.

மேலும், பவானி ஆற்றை பாதுகாக்கும் வகையில், தொழிற்பேட்டை திட்டங்களை, தமிழக அரசு ரத்து செய்யக் கோரி ஈரோடு ஆட்சியரிடம் மனு கொடுப்பது, அதனைத் தொடா்ந்து திருப்பூா் மாவட்டம், ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து அறவழிப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவன தலைவா் ஈசன், மே.கு.பொடாரன் (தமிழ்நாடு இயற்கை வாழ்வுரிமை இயக்கம்) மற்றும் விவசாயிகள், பொதுநல அமைப்பினா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com