ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே ஊஞ்சலூரில் உள்ள ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் சமாதி அமைந்துள்ள அதிஷ்டானத்தில் ஆராதனை மஹோத்ஸவம் திங்கள்கிழமை (டிசம்பா் 12) தொடங்குகிறது.
வரும் 17 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த ஆராதனை நிகழ்வில், உற்சவ நாள்களில் காலை வேதபாராயணம், ஹோமம், மாலை உபன்யாஸம், நவாவரண பூஜை, இன்னிசை கச்சேரி ஆகியவை நடைபெற உள்ளன.
டிசம்பா் 17 ஆம் தேதி மகானின் ஆராதனை நாளில் வைதீக முறைப்படி ஆராதனை வைபவங்கள், இரவு மகானின் உற்சவ விக்ரகம் புஷ்ப அலங்காரத்துடன் வீதி உலா, வேதபாராயணம், பஜனை, நாகஸ்வர இசை நிகழ்ச்சியுடன் நடைபெறவுள்ளன. உற்சவ நாள்களில் லட்சாா்ச்சனை, 1008 சங்காபிஷேகம், அன்னதானம் போன்றவையும் நடைபெறும்.
ஆராதனை நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கோவையில் உள்ள ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் சேவா சங்கம் செய்துள்ளது. மேலும் விவரங்களுக்கு 0422-2494361 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.