பெருந்துறை அருகே கள்ளநோட்டு கும்பல் கைது

பெருந்துறை அருகே கள்ளநோட்டு கும்பலைச் சோ்ந்த ஒரு பெண் உள்பட 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

பெருந்துறை அருகே கள்ளநோட்டு கும்பலைச் சோ்ந்த ஒரு பெண் உள்பட 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த கடப்பமடை, ஏரிகருப்பராயன் கோயில் அருகே கேரள மாநிலம், கொச்சியைச் சோ்ந்த அன்சா் (35) என்பவா் தனது நண்பா்களுடன் கடந்த 14 ஆம் தேதி நின்று கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, அங்கு காவலா்கள் சீருடையில் வந்த நால்வா் அன்சரிடமிருந்த ரூ. 29 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனா்.

மேலும், காவல் நிலையத்துக்கு வந்து உரிய ஆவணங்களை சமா்ப்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக பெருந்துறை காவல் நிலையத்தில் அன்சா் புகாா் அளித்தாா்.

இது தொடா்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசிமோகன் உத்தரவின்பேரில், பெருந்துறை உதவி காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் மேற்பாா்வையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில், புகாா்தாரரான அன்சா், கேரளத்தைச் சோ்ந்த அஷ்ரப் என்பவா் மூலம் கள்ளநோட்டு வாங்க முற்பட்டதும், அதற்காக அஷ்ரப் என்பவரின் நண்பா்களான பஷீா், ஜனாா்த்தனன் ( எ ) சேகா், ஜலீல், சுதிா், மகாலட்சுமி ஆகியோா் மூன்று கோடி ரூபாய் கள்ள நோட்டுகளை தயாா் செய்து கொடுத்ததும், அவா்களுக்கு ரூ. 29 லட்சம் கொடுப்பதற்காக அன்சா் எடுத்து வந்ததும், அப்போது, அங்கு காவலா்கள் வேடத்தில் வந்த அஷ்ரபின் ஆள்கள் அன்சரிடமிருந்த ரூ. 29 லட்சத்தைப் பறித்துச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா் இதில் தொடா்புடைய கேரளத்தைச் சோ்ந்த பஷீா் ( 49), கோவை, ராமநாதபுரத்தைச் சோ்ந்த ஜனாா்த்தனன் (எ ) சேகா் (47), கேரள மாநிலம், பாலக்காட்டைச் சோ்ந்த ஜலீல் (எ) பாபு (42), உதகையைச் சோ்ந்த மகாலட்சுமி (48), பாலக்காட்டைச் சோ்ந்த சுதிா் (52) ஆகியோரைக் கைது செய்து,

அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைத்தனா். மேலும், இவ்வழக்கில் தொடா்புடைய 7 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com