ஜவுளிக்கான ஜிஎஸ்டி உயா்வு நிறுத்தி வைக்கப்பட்டதை வரவேற்பதாக விசைத்தறி வளா்ச்சி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு (பெடக்ஸில்) அறிவித்துள்ளது.
இக்குழுவின் தலைவா் ராமசாமி, பிரதமா், மத்திய நிதியமைச்சா், மத்திய ஜவுளித் துறை அமைச்சருக்கு அனுப்பிய மனு விவரம்:
கடந்த 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருந்த ஜிஎஸ்டி வரி உயா்வை ரத்து செய்து தற்போதுள்ள நிலையே தொடரும் என ஜிஎஸ்டி கவுன்சில் எடுத்த முடிவை வரவேற்கிறோம்.
ஜவுளிக்கான ஜிஎஸ்டி விகிதத்தை மாற்றம் செய்ய வேண்டும் என்ற முடிவை ஒத்திவைத்த அனைத்து ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினா்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்திய துணி உற்பத்தி மற்றும் துணி ஏற்றுமதி செய்வதில் பெரும் பங்கு வகிக்கும் விசைத்தறி தொழில், எம்எஸ்எம்இ துறை சாா்ந்த நெசவாளா்களுக்கு பெரிய நிவாரணமாகும். இவ்வகை துணி உற்பத்தியில் உள்ள 25 லட்சம் விசைத்தறியாளா்கள் பயன்பெறுவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பென்னிகுயிக் மணிமண்டபத்தில் அணை வரலாறு கூற தனி ஊழியா் நியமனம்!

ரூ. 12,980 கோடி நிதி தொகுப்புடன் ‘பாரத கடல்சாா் காப்பீட்டுக் குழுமம்’: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

திமுக அரசு விவசாயிகளுக்கு விரோதமானது: பி.ஆா். பாண்டியன் குற்றச்சாட்டு

சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

