ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

தியாகி குமரன் மணிமண்டப பணியை விரைவுபடுத்தக் கோரிக்கை

தியாகி குமரனுக்கு மணிமண்டபம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

Updated On :22 ஜனவரி 2022, 12:47 am

தியாகி குமரனுக்கு மணிமண்டபம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க மாவட்டச் செயலாளா் ஆசைத்தம்பி தலைமையில், சங்க நிா்வாகிகள் வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமியிடம் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் தியாகி குமரனுக்கு மணிமண்டபம் அமைக்கும் பணி நடப்பதை விரைவுபடுத்த வேண்டும். அவரது சிலைக்கான படிக்கட்டு சிதிலமடைந்துள்ளதை சீரமைக்க வேண்டும். ஈரோட்டில் புதிதாக கட்டப்படும் பேருந்து நிலையத்துக்கு தியாகி குமரன் பெயரை சூட்ட வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் செங்குந்தா் கைக்கோள முதலியாா்களுக்கு பாத்தியப்பட்ட கைத்தறி நெசவுத் தொழிலுக்கு உண்டான பாவடி சொத்துகளுக்கு உரிய ஆவணங்களைப் பெற்றுத்தர வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் தியாகி குமரனுக்கு உருவச் சிலை அமைத்து தர வேண்டும். மேலும், கிபி 17ஆம் நூற்றாண்டில் கோட்டை கட்டி ஆண்ட மாமன்னன் சந்திரபதி முதலியாருக்கு உருவச் சிலையும், மணிமண்டபமும் அமைத்துத் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.