

கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில் சனிக்கிழமை முதல் மீண்டும் இயக்கப்பட்டது.
ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு தினமும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. ஈரோட்டில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்படும் ரயில் (06410) காலை 12 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் சென்றடையும்.
இதேபோல, மாலை 4.35 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்படும் ரயில் (06612) இரவு 8.45 மணிக்கு திருச்சி ரயில் நிலையத்தை சென்றடையும்.
திருச்சியில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்படும் ரயில் (06611) காலை 11.10 மணிக்கு ஈரோடு ரயில் நிலையம் வந்தடையும்.
மாலை 4.35 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் ரயில் (06409) இரவு 8.25 மணிக்கு ஈரோடு ரயில் நிலையத்தை வந்தடையும்.
கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த ரயில்கள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டன.
ஈரோடு-திருச்சி, திருச்சி-ஈரோடு பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள், அரசியல் கட்சியினா், பொது அமைப்பினா்
ரயில்வே நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதையடுத்து, ஈரோடு- திருச்சி பயணிகள் ரயில் சனிக்கிழமை முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து சனிக்கிழமை காலை 8.10 மணிக்கு ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில் புறப்பட்டுச் சென்றது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
காங்கிரஸ் கட்சி சாா்பில் ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளா் டி.திருசெல்வம், சிறுபான்மைத் துறை துணைத் தலைவா் கே.என்.பாஷா, ஊடகப் பிரிவு தலைவா் ம.முகமது அா்ஷத் உள்ளிட்டோா் பயணிகளுக்கு இனிப்பு வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.