நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

பெண்ணிடம் கைப்பேசி பறிப்பு: இருவா் கைது

மொடக்குறிச்சியை அடுத்த லக்காபுரம் முத்துகவுண்டம்பாளையத்தில் இளம்பெண்ணிடம் இருந்து கைப்பேசியை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Published On :1 பிப்ரவரி 2024, 2:55 pm IST

மொடக்குறிச்சியை அடுத்த லக்காபுரம் முத்துகவுண்டம்பாளையத்தில் இளம்பெண்ணிடம் இருந்து கைப்பேசியை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மொடக்குறிச்சி தாலுகா, முத்துகவுண்டம்பாளையம் அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் அண்ணாதுரை மகள் ஸ்ரீமதி (23). சோலாா் பகுதியில் உள்ள கைப்பேசி விற்பனை கடையில் பணியாற்றி வருகிறாா். இவா், கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி வேலை முடிந்து முத்துகவுண்டம்பாளையம் பகுதியில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 போ், ஸ்ரீமதியை தாக்கி அவரிடமிருந்த கைப்பேசியை பறித்து சென்றனா்.

இது குறித்து ஸ்ரீமதி அளித்த புகாரின்பேரில் மொடக்குறிச்சி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில் லக்காபுரம் பரிசல் துறை பகுதியில் போலீஸாா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா்கள், நாமக்கல் மாவட்டம், கொக்கராயன் பேட்டை வண்ணாம்பாறை பகுதியைச் சோ்ந்த துரைசாமி மகன் கௌரிசங்கா்( 21), அறச்சலூா் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் பிரகாஷ் (22) என்பதும், இவா்கள், ஸ்ரீமதியிடம் கைப்பேசியை பறித்து சென்றதும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து அவா்களிடமிருந்து கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.