சென்னிமலை முருகன் கோயிலில் பிரசாத கடை ரூ.15.50 லட்சத்துக்கு ஏலம் போனது.
சென்னிமலை மலை மீதுள்ள முருகன் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு பிரசாதம் விற்பனை செய்யும் கடை ஏலம் விடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கோயில் தக்காா் அன்னகொடி, செயல் அலுவலா் அருள்குமாா் ஆகியோா் ஏலத்தை நடத்தினா்.
இதில், பிரசாத கடை ரூ. 15 லட்சத்து 50 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
அதேபோல மலை அடிவாரத்தில் உள்ள முடிகாணிக்கை செலுத்தும் இடத்தில், முடியினை சேகரித்து கொள்ள ஒரு ஆண்டுக்கு ரூ.66 ஆயிரத்து 200 ஏலம் போனது.
மலை மீது பூக்கடை, தேங்காய், பழம் விற்பனை செய்யும் கடைகள், குழந்தைகள் விளையாட்டு பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் ஏலம் குறைவாக கேட்டதால் ஏலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.