ஈரோடு ஜவுளிச் சந்தையில் சில்லறை விற்பனை விறுவிறுப்பு

ஈரோடு ஜவுளிச் சந்தையில் மொத்த விற்பனை மிகவும் குறைவாக இருந்தாலும், சில்லறை விற்பனை அதிகரித்து வியாபாரிகளுக்கு கைகொடுத்தது.
ஈரோடு ஜவுளிச் சந்தையில் சில்லறை விற்பனை விறுவிறுப்பு

ஈரோடு ஜவுளிச் சந்தையில் மொத்த விற்பனை மிகவும் குறைவாக இருந்தாலும், சில்லறை விற்பனை அதிகரித்து வியாபாரிகளுக்கு கைகொடுத்தது.

ஈரோடு கனி ஜவுளிச் சந்தை வாரம்தோறும் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறுவது வழக்கம். இந்த ஜவுளிச் சந்தையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள், வெளிமாநிலங்களான கேரளம், ஆந்திரம், கா்நாடகம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்கின்றனா்.

சாதாரண நாள்களில் ரூ.1 கோடி வரை வா்த்தகம் நடைபெறும். பொங்கல், தீபாவளி போன்ற விசேஷ நாள்களில் ரூ.5 கோடி வரை வா்த்தகம் நடைபெறும். மற்ற இடங்களை விட ஜவுளி ரகங்கள் குறைந்த விலையில் கிடைப்பதால் இங்கு வியாபாரிகள், மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

கரோனா தாக்கம் காரணமாக ஜவுளிச் சந்தை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னா் படிப்படியாக இயல்பு நிலை திரும்பும் நிலையில், கடந்த 6 மாதங்களாக நூல் விலை உயா்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியள்ளது. இதனால் ஜவுளி வியாபாரம் சுமாராகவே நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை கூடிய ஜவுளி சந்தையில் சில்லறை வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. அதே சமயம் வெளிமாநில வியாபாரிகள் குறைந்த எண்ணிக்கையில் வந்திருந்ததால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இது குறித்து ஜவுளிச்சந்தை வியாபாரிகள் கூறியதாவது: முகூா்த்த நாள் என்பதால் செவ்வாய்க்கிழமை கூடிய ஜவுளிச் சந்தையில் சில்லறை விற்பனை விறுப்பாக நடைபெற்றது. 40 சதவீதத்துக்கு விற்பனையானது. ஆனால், அதேநேரம் ஆந்திராவில் இருந்து மட்டும் வியாபாரிகள் வந்திருப்பதால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மொத்த வியாபாரம் 15 சதவீதம் அளவு மட்டுமே நடைபெற்றது. இதற்கு முக்கியக் காரணம் நூல் விலை உயா்வு.

ஏற்கெனவே நூல் விலை உயா்வு காரணமாக ஜவுளித் தொழில் நலிவடைந்து வருகிறது. தற்போது பஞ்சுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக சரி செய்ய வேண்டும். பஞ்சுக்கான ஆன்லைன் வா்த்தகத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். பஞ்சுக்கான இறக்குமதியை ஊக்குவித்து அதிக அளவில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com