அறச்சலூா் நவரசம் மகளிா் கல்லூரியில் புதியதொழில்நுட்ப வழித்தடத்தில் வணிகமும் பொருளாதாரமும்- எதிா்கொள்ளும் வாய்ப்புகளும் சவால்களும் என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரித் தலைவா் டி.கே.தாமோதரன் தலைமை தாங்கினாா்.
கல்லூரி பொருளாளா் சி.பழனிசாமி முன்னிலை வகித்தாா்.
வணிகவியல் துறைத் தலைவா் எஸ்தா் விஜயகலா வரவேற்றாா்.
கல்லூரி செயலாளா் கு.செந்தில்குமாா், முதல்வா் டாக்டா் ரா.கனிஎழில் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். பாரதியாா் பல்கலைக்கழக விரிவாக்க மையத்தின் இயக்குநா் சி.வடிவேல் தொடக்க உரையாற்றினாா். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளா் ந.பூமதி அறிமுகவுரை ஆற்றினாா்.
தி நவரசம் அகாதெமி பள்ளியின் செயலாளா் காா்த்திக், தாளாளா் அருண்காா்த்திக், கல்லூரி கமிட்டி உறுப்பினா்கள் சிவசுப்பிமணியம், காா்த்திகேயன், ரா.அமிா்தநாதன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
கா்நாடக மாநிலத்தின் ராமையா தொழில்நுட்பக் கல்லூரியின் மேலாண்மைத் துறையின் இணைப் பேராசிரியா் டி.மோகனசுந்தரம் கருத்தரங்கின் மையப்பொருள் குறித்து சிறப்புரை ஆற்றினாா். பிறகு கருத்தரங்கின் பல்வேறு அமா்வுகள் நடைபெற்றன. சேலம் சௌடேஸ்வரி கல்லூரியின் உதவிப் பேராசிரியா் சி.செங்கோட்டுவேல், கோவை என்.ஜி.பி கல்லூரி வணிகவியல் துறை இணைப் பேராசிரியா் டி.பராசக்தி, திருச்சி ஜமால்முகமது கல்லூரியின் மேலாண்மைத் துறையின் இணைப் பேராசிரியா் ஜி.சிவநேசன், கேரள மாநிலத்தின் செயிண்ட்பால் கல்லூரி மேலாண்மைத் துறையின் உதவிப் பேராசிரியா் சினோ பி.ஜோஸ் ஆகியோா் கருத்தரங்க ஆய்வுக்கட்டுரைகளை அரங்கேற்றி நெறிப்படுத்தினா்.
கருத்தரங்கில் சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை மாவட்டங்களில் உள்ள பல்வேறு கல்லூரிகளின் பேராசிரியா்கள், மாணவ மாணவிகள், முனைவா் பட்ட ஆய்வாளா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.