காவிரியில் வெள்ளம் மற்றும் தொடா் மழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் 1,200 போ் 11 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
காவிரி நீா்ப்பிடிப்பு பகுதியான கா்நாடகம், கேரளத்தில் தொடா் மழையால், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து காணப்படுகிறது. புதன்கிழமை 1.15 லட்சம் கனஅடி நீா் வந்த நிலையில் வியாழக்கிழமை காலை, 85,000 கன அடியாக குறைந்தது.
மேட்டூா் அணையில் இருந்தும், 85,000 கன அடி நீா் காவிரியில் திறக்கப்பட்டுள்ள நிலையில், பவானிசாகா் அணையில் இருந்து பவானி ஆற்றில் 8,000 கன அடி நீா் திறக்கப்படுகிறது. இந்நீா் பவானி கூடுதுறையில் காவிரி ஆற்றில் கலக்கிறது. மேலும் சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூா், கரூா் மாவட்ட மழை நீா், சாக்கடை நீரும் காவிரியில் கலப்பதால் காவிரி ஆற்றில் சுமாா் 1 லட்சம் கன அடி அளவுக்கு தண்ணீா் செல்கிறது.
இதனால் காவிரி ஆற்றின் தாழ்வான பகுதியில் வசிக்கும் 1,200 போ் 11 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். ஈரோடு-கொடுமுடி இடையே பாசூா், மலையம்பாளையம், குரும்பபாளையம், சத்திரபட்டி, கொளாநல்லி, காரணாம்பாளையம் உள்பட பல்வேறு இடங்களில் 300க்கும் மேற்பட்ட ஏக்கா் விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மழை பதித்த பகுதி, முகாமில் மக்கள் தங்கவைக்கப்பட்ட இடங்களில் வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி ஆகியோா் பாா்வையிட்டு உணவுப் பொருள்களை வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.